College Header
விடுதி வசதி

கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கும் அளவிலான தங்கும் விடுதி அமைந்துள்ளது.படுக்கை வசதி, காற்றோட்டம், சலவை இயந்திரம், தொலைபேசி, தொலைக் காட்சி, எரிவாயு அடுப்பு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், தடையற்ற இணைய சேவை போன்ற வசிதிகள் உள்ளன.மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.தரமான உணவு வழங்கபடுகிறது.உணவின் தரத்தை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் விடுதி கண்காணிப்பாளரால் விடுதி பாதுகாக்கப்படுகிறது.