College Header
அறிமுகம்

மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக-பொருளாதார சவால்கள் மற்றும் சமூகப் பின்னணிகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த ஒரு முன்னெடுப்பாக 2008ஆம் ஆண்டு கல்லூரி, தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புக் குழுவை அமைத்தது. கல்லூரிக்கு வரும் பல்வேறு விதமான சமூக மற்றும் பொருளாதார பின்னணிகளையுடைய மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உதவுவது இவ்வமைப்பின் நோக்கமாகும்:

முக்கிய அம்சங்கள்:

வெளிநாட்டு உயர்கல்வி, கல்வி உதவித்தொகை வாய்ப்புகள், வேலைவாய்ப்பு நுழைவுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்குத் தகவல்களைச் சேகரித்து, பகுத்து ஆராய்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மேலும் கல்லூரி வழங்கும் பாடப்பிரிவுகளுடன் தொடர்புடைய செய்திகளை விளக்குவது.

வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக மாணவர்களுக்குக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வது.

ஒழுக்கம், ஆரோக்கியமான மனப்பாங்கு மற்றும் நேர்மறையான அணுகுமுறைகளை ஊக்குவித்து, தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தல் மற்றும் நாட்டு ஒற்றுமைக்கு எதிரான பகுதிசார் விருப்பங்களை நீக்குவதை ஊக்குவித்தல்.