கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாப் பணியாளர்களின் நலன் கருதி கல்லூரி நிர்வாகம் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகிறது. டாக்டர் கே.கோகிலா அவர்கள் மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார்.நம் மையத்தில் சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர், ஒற்றை படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொண்டுள்ளது. இந்த மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேவைகளை வழங்குகிறது. சுகாதார உதவியாளர் திருமதி எம்.பாலசுந்தரி அவர்கள் செவிலியராக பணிபுரிகிறார்.
இலவச சுகாதார வசதியினால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப்பணியாளர்கள் பயனடைகிறார்கள்.